லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும்!
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்க வேண்டும் என்பதுடன், எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் உடனடியாக வழங்க வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாதகாலமாக பதிவாகும் எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் அச்சத்துடன் சமையலை மேற்கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பல குடும்பங்கள் உணவுகள் இல்லாமலும் தவித்துள்ளன. இலங்கை என்பது ஒரு வெப்பமண்டல நாடாகும். வெப்ப சமநிலையை பேணும் வகையில்தான் எரிவாயு உற்பத்திகள் இதுவரைக்காலமும் இடம்பெற்றுவந்தன.
குறிப்பாக சிலிண்டர்களில் திரவவாயுவின் கலவை 80 சதவீதமாக காணப்பட்டது. திரவவாயு கலவை 80 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளமையால் தான் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றதாக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
திரவவாயு சதவீதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமைஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால்.அவ்வாறு திரவவாயு மாற்றத்திற்கான அனுமதியை வழங்கியது யார்?. லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உடனடியாக தற்காலிக தடைவிதிக்கப்பட வேண்டும்.
இதனால் ஓர் உயிர் ஏற்கனவே பறியோயுள்ளது. ஆகவே, எரிவாயு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நிவாரணத்தையும் லிட்ரோ கேஸ் நிறுவனம் உடனடியாக வழங்க வேண்டும்.
இதேவேளை, திரவவாயு மாற்றப்பட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றார்.