லிஸ்திரியா நோய் தொற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
லிஸ்ட்டியோரிஸிஸ் அல்லது லிஸ்திரியா எனப்படும் நோய் தொற்று தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொற்று நோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் இந்த நோய்த் தொற்று பரவுகை அபாயம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள கடையொன்றில் பெண் ஒருவர் லிஸ்திரியா நோய் அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொற்று நோய்த் தடுப்பு பிரிவின் அறிவிப்பு
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற இரண்டு யாத்ரீகர்கள் உயிரிழந்த போது அவர்களுக்கு லிஸ்திரியா தொற்று பரவியிருக்கலாம் என கூறப்பட்ட போதிலும் இதுவரையில் அது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், அந்தப் பகுதிகளுக்கு சென்று உணவு மற்றும் நீர் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தொற்று நோய்த் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
