இராணுவத் தலைமையகத்தில் இருந்து காணாமல் போயுள்ள பெயர்ப்பட்டியல்
இலங்கை இராணுவ (Sri Lanka Army) தலைமையகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த பெயர்ப்பட்டியல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பான விபரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிர விசாரணை
எனினும், ரஷ்ய-உக்ரைன் (Russia - Ukraine) போர் முனைக்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்பிய மோசடி தொடர்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரலே குறித்த பெயர்ப்பட்டியலை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பெயர்ப்பட்டியலைத் திருடிய சம்பவம் தொடர்பிலும், ரஷ்ய -உக்ரைன் போர்முனைக்கு இராணுவத்தினரை அனுப்பிய விவகாரம் குறித்தும் கைது செய்யப்பட்டுள்ள மேஜர் ஜெனரலிடம் தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
