தமிழர் தாயகத்தில் சுற்றுலா விருத்தி என்ற போர்வையில் மதுபான நிலையங்கள்: அரசுக்கு கடும் கண்டனம்

Jaffna Sri Lanka
By Theepan Dec 11, 2023 02:05 PM GMT
Report

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் சுற்றுலா விருத்தி என்ற போர்வையில் மதுபான விற்பனை நிலையங்களை அரசு ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் தாயகத்தில் சுற்றுலா விருத்தி என்ற போர்வையில் மதுபான நிலையங்கள்: அரசுக்கு கடும் கண்டனம் | Liquor Stores In The Tamil Homeland

மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதி இரத்து

"உடுப்பிட்டியில் மக்கள் செறிவுள்ள பகுதியில் சில மாதங்களுக்கு முன் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு எதிராக மக்கள் பெருமளவில் போராட்டம் செய்தபோது பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டு மதுபான விற்பனை நிலையத்தின் அனுமதி தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டு மூடப்பட்டது. ஆனால், தற்போது சில நாட்களாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெறுகின்றது.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, இமையாணன் இ.த.க பாடசாலை, நவிண்டில் தாமோதரா பாடசாலை என்பன குறித்த மதுபானசாலைக்கு மிகக் குறைந்த தூரத்திலேயே இருக்கின்றது.

இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளரைப் பொது அமைப்புகள் தொடர்பு கொண்டபோது நேரடியாகவும், வாய்மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்துக்கான சிபாரிசை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடி மகஜரைக் கையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் சுற்றுலா விருத்தி என்ற போர்வையில் மதுபான நிலையங்கள்: அரசுக்கு கடும் கண்டனம் | Liquor Stores In The Tamil Homeland

சமூக சீரழிவுகள்

ஆறு வருடங்களுக்கு முன்னரும் மதுபான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு பல சமூக சீரழிவுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் செய்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட்டது.

இரண்டாம் தடவையாக கொண்டுவர முயற்சித்தும் அது முடியாத நிலையில் மூன்றாவது தடவையாக திறக்கப்பட்ட மதுபான நிலையம் பொதுமக்களின் எதிர்ப்பால் மூடப்பட்ட போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அதில் தலையிட்டு அதைத் திறந்து வைக்க உத்தரவிட்டார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரது சந்திப்பில் சாதகமான முடிவு கிடைக்குமென பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கருதுகின்றனர். இது புதிய மதுபானசாலை அல்ல.

கடந்த காலங்களில் நெல்லியடியில் இயங்கிய மதுபான விற்பனை நிலையமே இங்கு இடமாற்றப்பட்டுள்ளது.

ஆகவே, அது பழைய இடத்திலேயே இயங்குவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், இந்த இடத்தில் இருந்து மதுபான விற்பனை நிலையம் அகற்றப்பட வேண்டும். இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கில் சுற்றுலாவை விருத்தி செய்ய வேண்டுமானால் சுற்றுலா மையங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். மதுபானத்தைக் காட்டி எங்கள் பிரதேசங்களுக்குச் சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவர வேண்டிய தேவை இல்லை  என்றும் தெரிவித்துள்ளார்.

வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் : குடும்ப உறவு பகிரங்க சவால் (Video)

வெளிவந்த துவாரகாவுடன் மரபணு பரிசோதனைக்கு தயார் : குடும்ப உறவு பகிரங்க சவால் (Video)

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)

புலம்பெயர் நாடுகளில் குறிவைக்கப்படுகின்ற தளபதிகளின் மனைவிகள்! ஒப்பரேஷன் துவாரகாவின் அதிர்ச்சித் தகவல்கள் (video)


மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US