மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மீளாய்வு செய்ய தீர்மானம்
மதுபானசாலைகளை திறக்கும் நேரத்தை மீளாய்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆரம்பிக்கப்பட்டுள்ள கலந்துரையாடல்
அது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் 23ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும் மக்களை சட்டவிரோத மதுபானத்திற்கு திரும்புவதை ஊக்குவிக்கின்றது.

சட்டவிரோத மதுபானம்
கடந்த 20 வருடங்களில் சட்டபூர்வ மதுபானம் 50% அதிகரித்துள்ளது. சட்டவிரோத மதுபானம் 500% அதிகரித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ளது. ஆனால் கண்டி மாவட்டத்தில் 990,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ளது.
சில பிரதேசங்களில் மதுபான கடையை தேடி 80 கிலோமீற்றருக்கு அப்பால் பயணிக்க வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri