மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு: வெளியானது அறிவிப்பு
உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா கையெழுத்திட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு நடவடிக்கை
அந்த அறிக்கையில் மேலும், அமைச்சரவையின் தீர்மானத்திற்கு இணங்க, மே மாதம் 12ஆம் திகதி வரும் வெசாக் பௌர்ணமி போயா தினத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் தேசிய வெசாக் விழாவை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 11ஆம் திகதி இரவு மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் நேரத்திலிருந்து மே மாதம் 15ஆம் திகதி திறக்கப்படும் நேரம் வரை நாட்டிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும்.
இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மது, போதைப்பொருள் மற்றும் புகையிலை தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பெரிதும் உதவியாக அமையும்.
பொதுமக்களிடம் கோரிக்கை
இதற்காக, 1913 என்ற இலக்கத்தினூடாகவும், 0112-877688 என்ற தொலைநகல் மூலமாகவும், oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள கலால் அலுவலகங்கள் மற்றும் விசேட கண்காணிப்புப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகளை வழங்குமாறு மதுவரித் திணைக்கள ஆணையர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
