மதுபான உற்பத்தி உரிமம் விவகாரம்: குற்றச்சாட்டை நிராகரித்த பிரதி அமைச்சர்
மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதிக்க கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம், சுமத்திய குற்றச்சாட்டை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க நேற்று நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பிய பிரதி அமைச்சர் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கத்தின் கருத்துக்களால் தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும்இது குறித்து, சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
பொது அதிகாரிகளாக, சாத்தியமான முதலீடுகளில் ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களை நாங்கள் அடிக்கடி சந்திக்கிறோம்.
எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் குறிப்பிடும் சந்திப்பு ஒருபோதும் நடக்கவில்லை, எனவே,. யூடியூப்பில் தோன்றும் விஷயங்களை பிரபலப்படுத்த நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று உறுப்பினர்களை தாம் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் வெளிப்படைத்தன்மை
“இதேவேளை ஒப்பந்தம் செய்வதை” முடிவுக்குக் கொண்டு வந்து வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காகவே தான் அரசியலில் நுழைந்ததாக பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.
“ இதன்போது பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம்,
பிரதி அமைச்சரின் கருத்துக்கள் தனிப்பட்ட அறிக்கையா அல்லது சிறப்புரிமைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டிய விஷயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதி அமைச்சர் தனிப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் பொறுப்புக்கூறலைத் தவிர்க்கக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பிரதி அமைச்சர் அபேசிங்கேவும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திகவும் கிங்ஸ்பரி ஹோட்டலில் ஒரு தொழிலதிபரை சந்தித்து, மதுபான உற்பத்தி உரிமம் குறித்து விவாதித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் கூறியதைத் தொடர்ந்து இந்த ஒழுங்கு பிரச்சினை எழுப்பப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |