12,000 கொடுத்து வந்த இரசிகர்கள்-சில நிமிடங்களில் கிளம்பிய மெஸ்ஸி..! மைதானத்தில் கலவரம்..
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில் மைதானதிற்கு வந்த மெஸ்ஸி வெகு சில நிமிடங்களே களத்தில் இருந்துள்ளார்.
அப்போதும் அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
கால்பந்து ரசிகர்கள்
மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
#MessiInKolkata was on the pitch for 22 minutes. Fans paid 1000's to get a glimpse of their icon. Enquiry committee? Sack the sports minister first then let's sort it out. @MamataOfficial di it's a matter of shame. Will you sack your sports minister? pic.twitter.com/m9vx2KuGxP
— SDutta (@KhelaHobePart2) December 13, 2025
அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.
டிக்கெட் தொகை
மெஸ்ஸியை காண ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை டிக்கெட் எடுத்து ரசிகர்கள் வந்துள்ளனர்.
ஆனால் உடனே கிளம்பியதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் போத்தல்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர்.
SHAME ON YOU, Mamata Banerjee !
— Suvendu Adhikari (@SuvenduWB) December 13, 2025
The "Khela Hobe" Circus Turns into a TMC Loot-Fest at Yuva Bharati !
What a pathetic spectacle in Kolkata today ! Our football-crazed Bengali Fans, dreaming of a glimpse of the GOAT Lionel Messi, shelled out thousands for tickets, only to be… pic.twitter.com/o6MSpTrWyu
இதனால் ரசிகர்கள் மீது பொலிஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பொலிஸார் கைது செய்தனர். மேலும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மயிலை கிழி கிழி என கிழத்த குடும்பம், அடுத்து சீரியலில் நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கதைக்களம் Cineulagam