இந்தியா சென்றடைந்த லியோனல் மெஸ்ஸி
ஆர்ஜென்டீனாவின் கால்பந்து அணி வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இன்று(13.12.2025) அதிகாலை இந்தியாவை சென்றடைந்துள்ளார்.
இந்த பயணத்தின் போது,கொல்கத்தாவில் லியோனல் மெஸ்ஸி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
குறித்த நிகழ்வின் போது, மெஸ்ஸி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நடிகர் ஷாருக் கான், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
ஹைதராபாத் செல்லும் மெஸ்ஸி
அதன்பின், நட்பு ரீதியான கால்பந்து போட்டியிலும் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து, ஹைதராபாத் செல்லும் மெஸ்ஸி அங்குள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடவுள்ளார்.
VIDEO | West Bengal: Argentine footballer Lionel Messi arrived at Kolkata Airport accompanied by Luis Suarez and Rodrigo De Paul.
— Press Trust of India (@PTI_News) December 12, 2025
(Source: Third Party)#LionelMessi
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/nNVfGvfpnX
தொடர்ந்து, மும்பை செல்லும் மெஸ்ஸி இந்திய கிரிக்கெட் கிளப்பில் நடைபெறும் படேல் கிண்ண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
பிரபலங்களுடன் கால்பந்து போட்டியிலும் அவர் பங்கேற்கிறார். இதனை அடுத்து நாளை மறுதினம் மெஸ்ஸி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டபுள் எலிமினேஷன்.. பிக் பாஸ் 9ல் இருந்து சற்றுமுன் எலிமினேட் செய்யப்பட்ட இரண்டு போட்டியாளர்கள் Cineulagam
கில்லியை ஓரங்கட்டி முதல் நாள் ரீ-ரிலீஸ் வசூலில் மாஸ் காட்டிய ரஜினியின் படையப்பா... தெறிக்கும் வசூல் Cineulagam