ஓய்வை அறிவித்தார் மெஸ்ஸி
அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும், உலகின் முன்னணி வீரர்களில் ஒருவருமான லியோனல் மெஸ்ஸி, தனது 21 ஆண்டுகால சர்வதேசக் கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், "இந்த முடிவை எடுப்பது மிகவும் வேதனையாக இருந்தது, இன்னமும் மனதிற்குள் வலிக்கிறது.
ஆனால் விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன்," என மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு அறிமுகமான மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 207 போட்டிகளில் விளையாடி அதிகபட்சமாக 125 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத்தை அர்ஜென்டினா வெல்வதற்கு அணித் தலைவராக அணியை வழிநடத்தினார்.
மேலும், 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 'கோபா அமெரிக்கா' கிண்ணங்களையும் வென்று கொடுத்துள்ளார்.
ஸ்பெயின் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியே அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி விளையாடிய கடைசிச் சர்வதேசப் போட்டியாகும்.
அர்ஜென்டினா அணியில் புதிய தலைமுறை வீரர்கள் உருவாகி வருவதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள மெஸ்ஸி, தேசிய அணிக்காகச் சாதனை படைத்ததில் பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.
8 முறை 'பாலன் டி ஓர்' (Ballon d'Or) விருது வென்ற மெஸ்ஸி, அமெரிக்காவின் 'இன்டர் மயாமி' கழகத்திற்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.