'சிம்பா' சிங்கக்குட்டியை பார்வையிட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு(Video)
'சிம்பா' என பெயரிடப்பட்டுள்ள, சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் 'சிம்பா' என பெயரிடப்பட்டு மிகவும் அன்பாக வளர்க்கப்படுகின்றது என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளார்.
தெஹிவளை பூங்காவில் சிம்பா
ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது.

பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்கள் கண்காணிப்பின் கீழ் வளர்ந்து வரும் சிம்பா மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri