எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குறைந்தது 50 வீதம் எரிபொருள் இருப்பை பேணுவது கட்டாயம் எனவும் ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்கு பிறகு இரத்து செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த இரண்டு தினங்களாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனது டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
CPC & LIOC are continuing to distribute fuel islandwide & there will be sufficient fuel stocks available in all Fuel stations by Sunday. CPC is also reviewing data of fuel orders placed & stocks maintained of all fuel stations in the past week. Initial reports have identified… pic.twitter.com/hgJP6fEehR
— Kanchana Wijesekera (@kanchana_wij) June 3, 2023
பெற்றோலிய கூட்டுத்தாபனம் மதிப்பாய்வு
எரிபொருள் கொள்வனவு மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த வாரத்தின் எரிபொருள் கையிருப்பு குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மதிப்பாய்வு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
121 எரிபொருள் நிலையங்கள் மே மாதம் 27 முதல் 31 வரை எந்த கொள்வனவையும் செய்யவில்லை என்றும் மேலும் பல எரிபொருள் நிலையங்கள் குறைந்தபட்ச கையிருப்புகளை பராமரிக்க போதுமான கொள்வனவை வழங்கவில்லை என்றும் முதற்கட்ட விசாரணை தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறைந்தபட்சம் 50 வீதம் எரிபொருள் கையிருப்பினை வைத்திருக்க வேண்டும்.
ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய எரிபொருள் நிலையங்களின் உரிமங்கள் பரிசீலனைக்குப் பிறகு இரத்துச் செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
You may like this

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
