தலைமன்னாரில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு : இந்தியா அறிவிப்பு
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Jaa) அறிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் பயணம் மற்றும் தரைவழிப்பயணம் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான படகுச் சேவை இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
திட்ட அறிக்கை
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நில இணைப்பு வழித்தடத்தை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, உரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அதனை நிறைவேற்றி முடிக்க பல ஆண்டுகள் தேவைப்படும் என்று சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
நில வழித்தட திட்டத்திற்கு மேலதிகமாக தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது உட்பட எரிசக்தி துறையின் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் எண்ணெய் குழாய் இணைப்பதே இந்தியாவின் நோக்கமாகும் எனவும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |