கிளிநொச்சியில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம்
கிளிநொச்சி மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் விநியோகிக்கப்பட்ட குடிநீர் விநியோகமானது இன்று முதல் (14) முதல் மட்டுப்படுத்தப்பட்டு விநியோகிப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கிளிநொச்சி குளத்து நீரில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக போதுமான நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் குடிநீர் விநியோகித்தை மட்டுப்படுத்தி விநியோகிக்க தீர்மானிக்கபட்டுள்ளது.
பொது மக்களுக்கு கோரிக்கை
இதன்படி கிளிநொச்சி டிப்போச் சந்தி, பரந்தன், பூநகரி, பொன்னகர் ஆகிய நீர்த்தாங்களிலிருந்து நீர் பெறும் கிராமங்களுக்கு இதனை கவனத்தில் எடுத்து செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மேற்படி நிலைமையினை கருத்திற்கொண்டு செயற்படுமாறும், கிளிநொச்சி குளத்தின் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை இந்நடவடிக்கை செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
