100 ஆவது நாளில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்களம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 ஆவது நாளை தாண்டியுள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இஸ்ரேல் கருதாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற ஆயுதங்களும் தொடர்ந்து நுழைகிறது. எனவே அதை நிச்சயமாக நாங்கள் மூட வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான பஞ்சம்
வடக்கு காசா முழுவதும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது மத்திய, தெற்கு காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.
காசா மீது ஏவுகணை குண்டுகள் தொடர்ந்து வீசப்படுவதுடன் தரை வழிதாக்குதல் நடைபெற்று வருகின்றது.
இந்த போரில், காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.
இந்நிலையில் காசாவுக்குள் நிவாரண பொருட்கள் செல்ல அனுமதிக்காவிட்டால் அங்கு கடுமையான பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |