மட்டுப்படுத்தப்பட்ட இந்தியா - இலங்கை கப்பல் சேவை
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானமானது போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று தினங்கள்
எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பயணிகள் வருகை அதிகரிப்பின் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் நாளாந்தம் இந்த கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் மாத்திரமே நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை முன்னெடுக்கப்படும் என சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri