நாமல் மனைவி லிமினியின் அரசியல் பயணம் தொடர்பில் திலக் வீரசிங்க வெளியிட்ட பரபரப்பு தகவல்
அநுராதபுரத்தில் மகிந்த ராஜபக்ச தலைமையில் 12 ஆம் நடைபெறவுள்ள கூட்டத்தில் லிமினி கலந்து கொள்ளுவது சாத்தியமில்லை என லிமினியின் தந்தையும் நாமல் ராஜபக்சவின் மாமனாருமான பிரபல தொழிலதிபர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வலையொளிதளம் ஒன்றுக்கு நேற்று(09.09.2026) வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
தொடர்ச்சியாக சிக்கப்போகும் ராஜபக்சர்கள்! கைது குறித்து தகவல் அறிந்த குடும்பம் - அரசியலுக்கும் அஸ்த்தமனமா..
லிமினி தந்தை பதிலடி
நான் லிமினியிடம் கேட்டபோது அவர் அப்படி ஆயத்தமாக இல்லை என்று சொன்னார். இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. எங்கள் நிலைமை என்னவென்றால் இவை்வாறான தகவல் எங்கிருந்து வெளியே வருகின்றது? எனக்கு தெரிந்தவரையில் லிமினி 12ஆம் திகதி அநுராதபுர மேடையில் ஏறமாட்டார்.
இன்று வரை அவர் மேடை ஏறுவாரா என்று எனக்கு தெரியாது. லிமினி நாமலை விட்டுவிட்டு மேடையில் ஏறி அரசியலில் மேலே வரப்போகிறாரா? என்பது சாத்தியமில்லை.

இப்போது எங்களது கடமை என்னவென்றால் லிமினியை பார்த்துக் கொள்வதும், அவரது பிள்ளைகளை பார்த்துக்கொள்வதும் தான். தற்போது அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். எங்கள் வீட்டில் இருந்து தான் உணவு அனுப்புகிறோம், வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் தான் சமைக்கிறார்கள்.
2029 ஜனாதிபதி வேட்பாளர் எனது மகள் லிமினி என குறிப்பிடுகிறார்கள். நான் அதனை ஏற்றுக்கொள்வதும் இல்லை. வீட்டில் அப்படி ஒரு உரையாடலும் நடக்கவில்லை. இது எங்கிருந்து இந்த அளவுக்கு வெளியே வந்தது என்பது தான் என்னுடைய கேள்வியாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
135 ஏக்கர் தேயிலைத் தோட்டம் - வெளிவரும் முக்கிய ஆவணங்கள்! ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக அதிரடி விசாரணை
you may like this video