முல்லைத்தீவில் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்குதல் - தீப்பற்றி எரிந்த தென்னைமரம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில், பல இடங்களில் மின்னல் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய், விசுவமடு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததுடன், மின்னல் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.
சீசிரிவி காட்சிகள்
இதன்போது, மின்னல் தாக்குதலுக்கு இலக்கான தென்னைமரம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் சீசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்குதல் காரணமாக குறித்த பகுதியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்குதலுக்கான வாய்ப்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக மின்னல் மற்றும் இடியுடன் கூடிய காலநிலையின் போது திறந்தவெளிகள், உயரமான மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகில் நிற்பதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.