நுவரெலியாவில் சொகுசுக் கார் ஒன்றின் மின்குமிழ்கள் திருட்டு
நுவரெலியா (Nuwara Eliya) - கொட்டக்கலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதி சொகுசுக் கார் ஒன்றின் முகப்பு மின்குமிழ்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த திருட்டு சம்பவம் நேற்று (23.04.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரானது, உரிமையாளரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மைதானம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே காரில் இருந்த மின்குமிழ்கள் திருடப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள்
அத்துடன், இந்த முகப்பு மின்குமிழ்கள் இரண்டினதும் தற்போதைய சந்தைப் பெறுமதி 350,000 ரூபாய் என உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் திம்புள்ள - பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி - திவாகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri