புத்தளம் - குருணாகல் பிரதான வீதியில் விபத்து : மூவர் படுகாயம்
புத்தளம் - குருணாகல் பிரதான வீதியின் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (22.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
புத்தளத்திலிருந்து ஆனமடுவ பகுதிக்குச் சென்ற லொறியுடன் ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற வான் மற்றும் வானிற்குப் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஆகியன மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது வானில் பயணித்த சாரதி உட்பட இருவரும், லொறியின் சாரதியும் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
