பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டமை மக்களின் உயிருக்கு ஆபத்து! சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்.
அனைத்து அரச பணியாளர்களையும் பணிகளுக்கு சமுகமளிக்குமாறு கூறி அரசாங்கம் புதிய சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இது மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு இதுவரை தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை.
இந்தநிலையில் அவர்களை சேவைக்கு அழைத்தால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு தீவிரமான மட்டத்தில் உள்ளது.
இவற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri