இம்ரான் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல்: குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பிற்கு சில முக்கியஸ்தர்களால் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டை அவர் நேற்றையதினம்(8) பதிவு செய்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்காத காரணத்தால் குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தனக்கு சமூக வலைத்தளம் ஊடாகவும் ஏனைய வழிகளிலும் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த நபர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தனது முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அத்துடன் தனது சட்டதரணி ஊடாக அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளதாகவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
