தானும் நெடுஞ்சாலை வீதியில் வைத்து கொல்லப்படலாம்: முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் அச்சம்
லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்று தானும் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உயிருக்கு எந்தவித பாதுகாப்பு இல்லை எனவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04.12.2023) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு அருகில் நகரும் “மிக்ஜாம்” சூறாவளி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
விளையாட்டுத்துறை அமைச்சர்
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிக் பாக்கெட் அல்லது மோசடி இன்றி 69 இலட்ச மக்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்றவர்களை போன்று தானும் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம் என ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருவதாகவும் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் கடந்த வெள்ளிக்கிழமை (01.12.2023) ஒளிபரப்பான நேர்காணலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
தான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை கூட பெறாமல் அனைத்தையும் விளையாட்டு நிதியில் வரவு வைத்து விளையாட்டிற்காக தன்னை அர்பணித்ததற்காக செயற்குழுவும், சட்டமன்றமும் வெட்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
you may like this





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 32 நிமிடங்கள் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
