வாழ்க்கையை கடவுளிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் அரசாங்கம் எதற்கு ? - சஜித் கேள்வி
வாழ்க்கையைக் கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்காக என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை நாடு 5400க்கும் அதிகமான கோவிட் இறப்புடன், பயங்கரமான சோகத்தில் மூழ்கியுள்ளது. எனவே நிலைமையை மோசமாக்க அனுமதிக்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் ஒரு பொறுப்புள்ள அரசாங்க அமைச்சர் “எதிர்காலம் கடவுளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் இறப்பு மற்றும் நோய்த்தொற்று நிகழ்வுகளின் அடிப்படையில் இலங்கை உலகில் முதலிடத்தில் உள்ளது. எனினும் அரசாங்கம் மிகவும் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறது.
அத்துடன், தமக்கு, வாக்களித்த 69 இலட்சம் மக்களின் மனதை இழிவுபடுத்தும் அறிக்கைகளை வெளியிடும் அளவுக்கு அரசாங்கம் மோசமடைந்துள்ளமை துரதிர்ஷ்டவசமானது.
கோவிட் பேரழிவு இலங்கையை ஆக்கிரமிப்பதாக, தாம், முன்கூட்டியே அறிவித்தபோது கூட, அரசாங்கம், பைத்தியக்காரத்தனமாகவும் பொறுப்பற்ற விதத்திலும் நடந்து கொண்டதாக சஜித் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அரசாங்கம், இந்த விடயங்களைப் புறக்கணித்தமை காரணமாக, துரதிருஷ்டவசமாக, இவற்றுக்கு நாட்டு மக்களே விலை கொடுப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.