மகிந்தவிற்கு மீண்டும் வழங்கப்படும் பிரதமர் பதவி: சாகர வெளியிட்டுள்ள தகவல்
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரசாரம் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு கட்சியில் இருந்து முன்மொழிவு வந்துள்ளதா? எனும் கேள்வி ஊடவியளாலர்களினால் எழுப்பப்பட்ட போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை என்பது முழுப் பொய், இந்த நாட்களில், எதிர்க்கட்சியினர் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்கள் பொய்யான தலைப்புகளை உருவாக்குகிறார்கள், எனவே நாங்கள் ஒரு கட்சியாக மிகவும் வலுவாக செல்கிறோம்.
பிரதமர் பதவி
அமைச்சரவை திருத்தங்கள் என்பது முழுக்க முழுக்க ஜனாதிபதிக்கு சொந்தமான விடயம். கட்சி என்ற ரீதியில் நாங்கள் அந்த விடயத்தில் தலையிட மாட்டோம். அவ்வாறான யோசனைகள் எதுவும் இல்லை.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க வேண்டும், நாம் ஒவ்வொருவரும் சொல்வது போல் இல்லை.
கட்சியில் இருந்து மக்கள் பலத்துடன் அதைச் சரியாகச் செய்வோம் என தெரிவித்துள்ளார்.