மன்னர் சார்ள்ஸை கடுமையாக திட்டிய அவுஸ்திரேலிய அரசியல்வாதி
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தற்பொழுது அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அதிகாரபூர்வமான இந்த விஜயத்தின் போது அவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றிற்கும் சென்று உரையாற்றியுள்ளார்.
இந்த உரையின் நிறைவில் அவுஸ்திரேலியா பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் மன்னர் சார்ள்ஸிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளார். நீங்கள் எனது மன்னர் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சார்ள்ஸ் மற்றும் அரசி கமிலாவிற்கு நெருக்கடி
சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான லிடியா தோர்ப் என்பவரே இவ்வாறு மன்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளார்.
நீங்கள் களவாடிய நிலங்களை எங்களிடம் தாருங்கள் என அவர் லிடியா கோஷம் எழுப்பியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மன்னர் சார்ள்ஸ் மற்றும் அரசி கமிலாவும் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய மன்னரின் உரையின் போது ஆஸ்திரேலியா பழங்குடி இன மக்களின் வகிபாகம் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.
சுமார் 230 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியர்கள் அவுஸ்திரேலியாவில் சென்று குடியேறுவதற்கு முன்னதாக அவுஸ்திரேலியா பழங்குடியின சமூகத்தினால் ஆட்சி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியர்களின் வருகையைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலான பழங்குடியின மக்கள் கூட்டுப் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |