ஐந்து மதுபான நிறுவனங்களின் உரிமங்கள் இரத்து: கலால் திணைக்களம்
வரி நிலுவையை செலுத்த தவறியதன் காரணமாக ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, “சினெர்ஜி டிஸ்டில்லரீஸ் லிமிடெட்”, “ஃபின்லாந்து டிஸ்டில்லரீஸ் கோர்ப்பரேஷன் லிமிடெட்”, “வயம்ப டிஸ்டில்லரீஸ்”, “டபிள்யூ எம் மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட்” மற்றும் “ரந்தேனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா லிமிடெட்” ஆகியவற்றின் உரிமங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக நிலுவைத் தொகையை செலுத்தாதிருந்த, இந்த நிறுவனங்களுக்கான வருடாந்த அனுமதிப்பத்திரங்கள், கடந்த அக்டோபர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டதாக கலால் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
விநியோக தடை
இதனையடுத்து அவை புதுப்பிக்கப்படவில்லை என மதுவரித்திணைக்கள ஆணையாளர் சமன் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவர்களின் மதுபான உற்பத்தி மற்றும் விநியோகமும் தடைசெய்யப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைக்குள் 20 க்கும் மேற்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் செயற்படுகின்றன என்றும், இந்த நிறுவனங்களின் இடைநிறுத்தம் காரணமாக சந்தையில் மது விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.