லிபிய பிரதமரின் வாகன தொடரணி மீது துப்பாக்கி பிரயோகம் (Video)
லிபிய பிரதமரின் வாகனத் தொடரணி மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடைக்காலத் தலைவர் வீடு திரும்பும் வேளையில் லிபிய தலைநகர் திரிபோலியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி தோட்டாக்களில் ஒன்று பிரதமரின் காரின் கண்ணாடிக்குள் ஊடுருவியதாகவும், ஆனால் அவரும் அவரது வாகன சாரதியும் காயமின்றி தப்பியுள்ளனர்.
இந்த தோட்டாக்கள் ஒரு இலகுரக ஆயுதத்தில் இருந்து சுடப்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த ஆண்டு லிபியாவின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்ட அப்துல்ஹமித் டிபீபா, தன்னை பதவி நீக்கம் செய்யும் எதிர்ப்பாளர்களின் முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்துள்ள நிலையில், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் மீதான கடுமையான பிரிவு சண்டைகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 3 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam