வெளிநாடுகளில் கைதான 13 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் விரைவில் நாட்டுக்கு
வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள 13 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சர்வதேச பொலிஸாருடன் இலங்கை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசாரணகைள் மற்றும் சுற்றி வளைப்புக்களின் விளைவாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 12 மாத காலப் பகுதியில் வெளிநாடுகளில் பதுங்கியிருந்த சுமார் 32 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்கள் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் கொண்டே ரஞ்சி, படுவத்தே சாமர, வனதே லொக்குமல்லி போன்ற பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த விரசூரிய தெரிவித்துள்ளார்.