ஈரான் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்க படைகள்! பதிலடி வழங்கப்படும் என கடும் எச்சரிக்கை
அமெரிக்க படைகள் நேற்றையதினம்(19) வளைகுடாவில் ஈரான் கொடியேற்றிய சரக்குக் கப்பலை துப்பாக்கிச் சூடு நடத்தி கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி வழங்கப்படும் என ஈரானின் இராணுவம் எச்சரித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியும், கடல் வழித்தடத்தில் கொள்ளைச் செயலில் ஈடுபட்டும், தாக்குதல் நடத்திய அமெரிக்கா ஓமான் கடல் நீர்ப்பரப்பில் ஈரானின் வர்த்தகக் கப்பலைத் தாக்கியுள்ளது” என்று ஈரானின் அரசுத் தொலைக்காட்சி Islamic Republic of Iran Broadcasting தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
மேலும், அந்தக் கப்பலின் வழிசெலுத்தும் கருவிகளை அமெரிக்கா சேதப்படுத்தியதுடன், கப்பலின் மேற்பரப்பில் படையினரையும் நிறுத்தி, “அதற்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை நேரடியாக மேற்கொண்டுள்ளது” என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த அமெரிக்க ஆயுதக் கடற்கொள்ளைக்கு எதிராக, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப்படைகள் விரைவில் பதிலடி வழங்கும் என்பதை எச்சரிக்கிறோம்” என அந்த அறிக்கை முடிவடைந்ததுள்ளது.