கச்சதீவு தொடர்பான கடிதங்கள்! அரசாங்கத்திற்கு தெரியாது என்கிறார் பந்துல
கச்சதீவு தொடர்பில் இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோர் கூறியவை தொடர்பிலோ அது தொடர்பான கடிதங்கள் தொடர்பிலோ இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கச்சதீவை மீளப்பெற வேண்டும் என இந்தியாவில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15.08.2023) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொண்டு நட்புறவு ரீதியில் முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலேயே இலங்கை வெளிநாட்டு கொள்கைகளை பின்பற்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




