நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட யாழ் மாவட்ட பட்டதாரிகள் : வடமாகாண ஆளுநருக்கு கடிதம் கையளிப்பு
இலங்கை பல்கலைக்கழகத்தில் 2019.12.31 திகதிக்குள் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து இதுவரை 60000 பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்ட பட்டதாரிகளில் யாழ் மாவட்ட பட்டதாரிகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர்.
அவர்கள் குறித்த மகஜரில் தெரிவிக்கையில்,
நாங்கள் 2016 தொடக்கம் 2019க்குள் பட்டம் முடித்தும் அரசாங்கம் கோரிய அனைத்து தகுதிகள் இருந்தும் இதுவரை பட்டதாரி பயிலுனர் நியமனம் கிடைக்காமல் உள்ளது.
எங்களுடன் எங்களுக்குப் பின்பு பட்டம் முடித்த எங்களுடைய சமமான தகுதியை உடைய நண்பர்கள் இன்று பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்று 1வருடமும் 3 மாதங்கள் நிறைவுபெற்றுவிட்டன.
ஆனால் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு நியாயமும் கிடைக்கப்பெறவில்லை இதுவரை பல பெயர் பட்டியல்கள் வந்தும் எங்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை.
இவ்வாறு பல பட்டதாரிகள் தாங்கள் தனியார் துறைகளில் மேற்கொண்டு வந்த வேலைகளை 2020.03.10 ம் திகதிகளிலிருந்தே விலகி இவ் பட்டதாரி பயிலுனர் நியமனத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.
எங்களால் எங்களுக்குரிய சகல தகமைகளையும் நிரூபித்துக்கூட அமைச்சு எங்களைப்பற்றி கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. கடந்த 3 மாதம் மேன்முறையீடு செய்திருந்தோம்.
கிட்டத்தட்ட இவ்வாறான நிலையில் 465 மேற்பட்ட பட்டதாரிகள் இருக்கின்றோம். எங்களது பெயர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனை இன்னும் வெளியிடாமல் தாமதப்படுத்துகின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகள் எங்களை மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

