கொழும்பில் பெண்ணை கொலை செய்த பொலிஸ் அதிகாரி மனைவிக்கு எழுதிய கடிதம்
பெண்ணொருவரை கொடூரமான முறையில் கொலை செய்த காவல்துறை பரிசோதகர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
30 வயதான பெண்ணின் தலை வெட்டி கொலை செய்த 52 வயதான காவல்துறை பரிசோதகரே அவரது வீட்டுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இவரது சடலத்துக்கு அருகில் தனது மனைவிக்காக எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உறவு காணப்பட்டதாகவும் அந்த உறவு காரணமாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மனைவிக்கு தெரியாமல் தான் இழைத்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது தாயின் உத்தரகிரியைகளுக்காக வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற பெண்மணியே கொல்லப்பட்டிருந்தார்
இந்த பெண் கொலை செய்யப்பட்டதுடன் சடலத்தை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சடலத்தின் பிரேத பரிசோதனையை இன்று நடத்துவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை இன்னமும் கண்டறியப்படவில்லை என்றும் அதனை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.







ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
