மஹிந்தவுக்கு சம்பந்தன் எழுதிய மடல்
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக தமிழ் பேசத் தெரியாத ஒருவரை அரசாங்கம் நியமித்துள்ளமையை கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 95% க்கும் அதிகமான மக்கள் தமிழ் மொழியையே பேசுகிறார்கள் என்பதை மேற்கோளிட்டு அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் பேசத்தெரியாத அதிகாரியை மாவட்ட செயலாளராகவும் அரச முகவராகவும் நியமிப்பது பொருத்தமற்றது என்றும் அது ஜனநாயக விரோதமான செயற்பாடு என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வடக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக திறமையான மற்றும் தமிழ் பேசக்கூடிய அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் அவ்வாறு நியமித்தால் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் பேசுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடத்தில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கு உதவும் வகையில் ஆட்சி அதிகாரங்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
