அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
அரசியலமைப்பின் 21ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இலங்கையின் மிகப் பழைமையான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பின் கடிதத்தில் அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்துக்கு இணக்கம் தெரிவித்தமை குறித்து ஜனாதிபதிக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தச்சட்ட நகலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
அத்துடன் தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலில் சிற்சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
1. ஜனாதிபதிக்கு அமைச்சுப் பொறுப்புகளை வகிக்கும் உரிமையை ரத்துச் செய்தல்.
2. அமைச்சரவையின் எண்ணிக்கையை 20க்குள் மட்டுப்படுத்தல், பிரதியமைச்சர்களின் எண்ணிக்கையையும் 20 ஆக வரையறுத்தல்.
3. தூதுவர்கள் மற்றும் உயர்பதவிகளுக்கான நபர்களை நியமிக்கும் போது அரசியல் அழுத்தங்கள் இன்றி பொருத்தமானவர்களை நியமித்தல்.
4. நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்துக்கு நிபந்தனைகளை விதித்தல் போன்றன பெப்ரல் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளாகும்.
குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 புகழ் பவித்ராவுக்கு அடித்த லக்... யாருடைய இசையமைப்பில் பாடுகிறார் தெரியுமா? Cineulagam
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan