மாற்று வழியை நாடுவோம் - ஜனாதிபதிக்கு கத்தோலிக்க ஆயர்கள் குழு எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குல் தொடர்பில் நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் வௌிப்படைத்தன்மையுடன் இடம்பெறாவிட்டால், அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான தேசிய கத்தோலிக்க ஆயர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நேற்று கடிதம் மூலம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஒரு மாதத்துக்குள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனத் தாம் நம்புவதாகவும் ஆயர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு பேராயருடன் ஐந்து ஆயர்கள், உதவி ஆயர்கள் உள்ளிட்ட 34 பேர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசு, சாட்சியங்களில் வௌியான தகவல்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆற்றிய உரை உள்ளிட்ட பல விடயங்களை அடிப்படையாக கொண்டு, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குல் தொடர்பில் இதுவரை வௌியாகாத பல விடயங்களை சுட்டிக்காட்டி இந்தக் கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri