இலங்கையிலிருந்து சார்லஸ் மன்னருக்கு சென்ற கடிதம்
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த நாட்டிலும் பிரித்தானியாவிலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டுள்ளதால் அவருக்கு எதிராக குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கையில் உள்ள சமூக ஆர்வலர்கள் குழுவொன்று பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. '
சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட மற்றும் சிலர் இந்தக் கடிதத்தை இன்று (28) பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று கையளித்துள்ளனர்.
டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ஓஷல ஹேரத்தும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருக்கும் டயானா கமகே
பிரித்தானிய பிரஜையான டயானா கமகே சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து போலி அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்டு இலங்கை பிரஜை போல் நடித்து அரச பதவிகளை வகித்து தேர்தலில் போட்டியிடுவது இந்நாட்டு சட்டத்துக்கும் எதிரானது.

பிரித்தானிய சட்டத்தின்படி, சார்லஸ் மன்னன் தன்னை விசாரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தர்ஷன ஹந்துங்கொட கோரிக்கை விடுத்துள்ளார்.
வீசா காலாவதியான டயானா கமகே தற்போது சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri