இந்திய நீதித்துறை தொடர்பில் சட்டத்தரணிகள் அனுப்பியுள்ள கடிதம்
இந்திய நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் இருப்பதாக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசருக்கு 600 சட்டத்தரணிகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்தக்கடிதத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ள அதேநேரம் மோடியின் இந்த விமர்சனத்துக்கு காங்கிரஸ் தலைவர்களும் பதில் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அழுத்தங்கள்
இந்திய சட்டத்தரணிகள் சபையின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூத்த சட்டத்தரணி ஹரிஸ் சால்வே உட்பட 600 சட்டத்தரணிகள் இந்த கடிதத்தை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் டி.ஒய்.சந்திரசூட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து இந்திய நீதித்துறையைப் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடித்த்தில் “தேசம் இப்போது தேர்தல் களத்தை எதிர்கொண்டிருக்கிறது. இத்தகைய தருணத்தில் சுயநலவாத கும்பல் ஒன்று இந்திய நீதித்துறைக்கு அழுத்தம் தருவதற்கும் இந்திய நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும் முயற்சித்துக் கொண்டுள்ளது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறித்த கடிதத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளதோடு பிறரை துன்புறுத்துவது தான் காங்கிரஸின் கலாசாரம். 140 கோடி மக்களும் காங்கிரஸை நிராகரித்ததில் ஆச்சரியம் இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
