பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் விட்டுச் சென்ற கடிதம்
பாணந்துறை, அலுபோமுல்ல பொலிஸ் பிரிவின் சந்தகலவத்த பகுதியில் உள்ள ஒரு கடையில் இன்று (06) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
இதற்கிடையில், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த துப்பாக்கிதாரிகள் விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு மிரட்டல் கடிதத்தையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் தகராறு
இந்நிலையில் போதைப்பொருள் தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கடைக்குள் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் கடைக்குள் ஒரு பெண் இருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கடையின் குளிர்சாதன பெட்டியை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




