ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் கடிதம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமான விசாரணைகள் குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான கைது செய்யப்பட்டுள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் குறித்து எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் தனது கடிதத்தின் மூலம் கோரி இருப்பதாகச் சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுகிறதா என்பது பற்றியும் கடிதத்தில் வினவப்பட்டுள்ளது.
5 சந்தேகநபர்கள் சம்பந்தமாக நடத்தப்பட்டுள்ள விசாரணைகள் முழுமையாக நடத்தப்படவில்லை என்பதைச் சட்டமா அதிபர் இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.




