ஓரணியாய் அணி சேர்வோம்! சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டுக் குழு சார்பாக கோரிக்கை
சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் “பொத்துவில் தொடங்கிப் பொலிகண்டி வரை” பெப்ரவரி 3 முதல் 6 வரை, இலங்கையில் தோன்றி இருக்கின்ற இன ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ் பேசும் மக்களின் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுக் கொண்டுள்ளது.
பெப்ரவரி 3ஆம் திகதி அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பிக்கவிருக்கும் பேரணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஊடாக பொலிகண்டி பிரதேசம் வரை சென்று பெப்ரவரி 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் நிறைவு பெறும்.
இம்மாபெரும் பேரணி கால்நடைப் பேரணியாகவும், வாகனப் பேரணியாகவும் கிளிநொச்சியூடாக பெப்ரவரி 6ஆம் திகதி மதியம் 2 மணியளவில் சாவகச்சேரி நகரை வந்தடைந்து,
பின்னர் மாலை 3 மணியளவில் யாழ்ப்பாண நகரை வந்தடையும். பின்னர் யாழ்ப்பாண நகரிலிருந்து புறப்பட்டுப் பேரணியாகச் சென்று மாலை 4 மணியளவில் பொலிகண்டி செம்மீன் படிப்பகத்தின் அருகே சென்று நிறைவு பெறும்.
எமது மண் அபகரிப்பு மற்றும் உரிமை மறுப்பு போன்ற அரசின் அராஜக நடவடிக்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுகின்ற எமது போராட்டத்துக்கு ஆதரவாகக்குரல் கொடுப்பீர்.
உங்கள் ஆதரவே எமது பலம். உங்கள் இணைவே எம்மைப் பலப்படுத்தும் எனத் தமிழ் மக்கள் பணியில் யாழ். மாவட்ட இணைப்பாளர் (சிவில் சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டுக் குழு சார்பாக) கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.





ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
