பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்: அமைச்சர் சந்திரசேகர்
பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளை நாம் நிச்சயம் கிழித்தெறிவோம் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்று(30.6.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என்ற உறுதியுடனேயே நாம் பொறுப்பேற்றோம். அதற்கான மாற்றங்களைச் செய்தும் வருகின்றோம்.
பெண்களின் பாதுகாப்பு
சமீபத்தில் அரச நிறுவனத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவொன்று வெளியாகியிருந்தது.
பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளை நாம் நிச்சயம் கிழித்தெறிவோம். பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசு பாடுபடுகின்றது.

தற்காலத்தில் பெற்றோர்கள் சமூக அக்கறையின்றி, தமது பிள்ளைகளை வெளி உலகம் தெரியாத வகையில் வளர்க்கின்றனர்.
'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan