யாழ்.வடமராட்சி பிரதேச சபையில் கடும் வாதப்பிரதிவாதம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு சபையின் உப தவிசாளர் தி.தயாபரன் தலைமையில் இடம்பெற்றபொது நேற்று(30.06.2026) கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
ஊடகவியலாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிய போதே கடும் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சபையை குழப்பும் நோக்குடன்
குறிப்பாக ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறுபகுதிக்குள் நடமாட இயலாது, ஒலி, ஒளிப்பதிவு செய்வதற்கு அனுமதியளித்திருந்தாலும் தவிசாளரினால் பதிவுகளை நிறுத்துமாறு கட்டளையிட்டால் எதுவித மறுப்புமின்றி உடனடியாக செயற்படுத்த வேண்டும், உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் கடுமையான தொனியில் நடைபெற்றால் அவர்களின் கௌரவம் பாதிக்கும் வகையில் ஒலி, ஒளிப்பதிவு செய்தலாகாது, ஊடகவியலாளர் சபை உறுப்பினர் ஒருவரிடமிருந்தோ அல்லது பிறநபர் ஒருவரிடமிருந்தோ ஒலி, ஒளிப்பதிவுகளை பெற்று செய்தியாக வெளியிட முடியாது.

அதாவது நேரடியாக பதிவு செய்யப்பட்ட ஒலி, ஒளிப்பதிவுகளை மட்டுமே செய்தியாக வெளியிட முடியும், தவிசாளர் வெளியேறுமாறு தீர்மானித்தால் உடனே வெளியேற வேண்டும், ஒழுக்கக்கேடான செயற்பாடுகளை முற்றுமுழுதாக தவிர்க்கவேண்டும். சபை அமர்வின்போது கேள்விகள் எழுப்பலாகாது போன்ற நிபந்த்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதில் சபை அமர்வில் பங்குகொண்ட பின்னர் எழுந்து நின்று ஒளிப்பதிவு செய்ய முடியாது என்ற நிபந்தனை தொடர்பாகவே தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய போது கடும் வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றது.
சபை அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் தியாகராசா தயாபரன் சபையை குழப்பும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு என்று இதனை மறுத்திருந்தார்.
எனினும் நேற்றைய அமர்வில் ஊடகவியலாளர்களை உறுதிப்படுத்தி இனிவரும் அமர்வுகளில் அனுமதிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 22 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam