யுத்தத்தின் பின் முதன் முறையாக யாழ். மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு (Photos)
இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - முற்றவெளிப் பகுதியில் நாளைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (14.07.2023) கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தில் நாட்டை முன்னேற்றும் பயணத்தில் அனைவரையும் ஒன்று திரட்டி செயற்படும் திட்டத்தின் காரணமாகவே இந்த glocal fair திட்டத்த நாம் யாழில் ஆரம்பித்தோம்.
கட்சி, மதங்களை மறந்து யாழ். மக்கள் அனைவரையும் நாம் இந்த கண்காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம். குறித்த கண்காட்சியானது எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் தொழில் அமைச்சின் கீழான சகல திணைக்களங்கள், ஊழியர் நம்பிக்கை நிதியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் சேவைகள் அனைத்து ஓர் இடத்தில் ஒருமித்துளையால் சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
யாழ். மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு
இந்த கண்காட்சி வேலைத்திட்டத்தில் ஆலோசனை சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். கொழும்புக்கு வந்து தீர்த்து கொள்ள கூடிய சில பிரச்சினைகளை யாழிலே தீர்க்க சில வழிநடப்புக்களை இங்கு பெற முடியும்.
விசேடமாக சர்வதேச வேலைதிட்டங்களை பற்றி அறியும் வாய்ப்பு யாழ். மக்களுக்கு கிடைத்துள்ளது. யுத்தத்தின் பின் இதுவே முதல் தடவையாக யாழில் இவ்வாறானதொரு நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |