பசில் ராஜபக்சவின் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவோம்-விமல் வீரவங்ச
சுதந்திர மக்கள் கூட்டமைப்புக்கே நாட்டை படுகுழியில் தள்ளிய பசில் ராஜபக்ச போன்றோரின் அரசியலையும் அதிகாரத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களில் பெரும்பான்மையானோர் எங்களுடன்
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்த 69 லட்சம் மக்களின் பெரும்பான்மையானோர் சுதந்திர மக்கள் கூட்டமைப்புடனேயே இருக்கின்றனர்.
இதனை நன்கு அறிந்த பசில் ராஜபக்ச உள்ளிட்ட சக்திகள் சுதந்திர மக்கள் கூட்டமைப்பை வீழ்த்த அநாகரீகமான முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மொட்டுக்கட்சி எமது கூட்டணியே மிகப்பெரிய சவால்
சுதந்திர மக்கள் கூட்டமைப்பே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் எமது கூட்டமைப்புக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.
சுதந்திரக்கட்சியும் எமது கூட்டணியும் எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை ஒத்துழைப்புடன் எதிர்கொள்வோம் எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
