இலங்கை அரசாங்கத்தை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுற்றுலா பயணிகள்
மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
குறித்த விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் நிறைந்துள்ளதனை பார்ப்பதற்கு மகிழ்ச்சியான உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாதத்திற்கு குறைந்த பட்சம் 125000 சுற்றுலா பயணிகள் வரும் விமான நிலையமாக மத்தல விமான நிலையம் எதிர்வரும் காலங்களில் மாறவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சி அடையத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.