புதுக்குடியிருப்பில் சிறுத்தை புலி கொலை செய்யப்பட்டு பல் விற்பனை : இருவர் கைது
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் அரியவகை உயிரினமான சிறுத்தை புலி கொல்லப்பட்டு அதன் பற்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(7.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கையில் அரிதாகக் காணப்படும் சிறுத்தை புலி ஒன்றை கொன்று, அதன் நான்கு கால்களையும் வீட்டுவளவில் புதைத்து, பற்களை விற்பனை செய்திருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணை
குறித்த புலிப்பற்களை ரூபாய் 110,000க்கு வாங்கிய வர்த்தகர் ஒருவரும், அதற்குத் துணைநின்ற மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாக உள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam