மர்மமான முறையில் உயிரிழந்த சிறுத்தை மீட்பு - வனவிலங்கு அதிகாரிகள் விசாரணை
நாவலப்பிட்டி - வெரலுகஷின்ன பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுத்தையொன்றின் உடல், கம்பளை வனவிலங்கு அலுவலக அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(27.10.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளின் எல்லைகளில் உள்ள ஓடைகளுக்கு அருகில் வனவிலங்குகளைப் பிடிப்பதற்காக வைக்கப்படும் கம்பிக் கண்ணிகளில் சிறுத்தைகள் தொடர்ந்து சிக்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த நிலையில் சிறுத்தை மீட்பு
இதற்கமைய, உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தை தப்பிக்க முயன்று, ஓடைகளில் விழுந்து காயமடைந்து உயிரிழந்ததா ? அல்லது சில நாட்களுக்கு முன்பு, இரையைத் துரத்தும் போது தவறி சிறுத்தை விழுந்ததா ? என்ற கோணத்தில் விசாரணைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.

நீர் ஓடைக்கு அருகிலுள்ள கோபி தோட்டத்தில் வேலைக்குச் சென்ற ஒரு தொழிலாளி சிறுத்தையின் உடலைக் கண்டு, நாவலப்பிட்டி பொலிஸார் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சம்ப இடத்துக்கு வருகை தந்த அதிகாரிகள் சிறுத்தையின் உடலை பத்திரமாக நீரோடையிலிருந்து மீட்டு, நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், அதன் பின்னர் நீதவானிடமிருந்து உரிய அனுமதிகளை பெற்று சிறுத்தையின் பிரேதப் பரிசோதனைக்காக ரந்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.

