ஆதிசிவன் கோவில் விவகாரங்களிற்கான சட்ட நிபுணர் குழு: தமிழ்ச்சைவப் பேரவை
வெடுக்குநாறி - குருந்தூர் மலை ஆதிசிவன் கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்களிற்காக சட்ட நிபுணர் குழு ஒன்றினை தமிழ்ச்சைவப் பேரவை அமைத்துள்ளது.
கோவில்கள் மற்றும் கன்னியா வெந்நீருற்று விவகாரங்கள் நீதிமன்ற வழக்குகளோடு தொடர்புபட்டு தங்கள் வசதிக்கு தகுந்த வகையில் அரசினால் பயன்படுத்தப்பட்டு மீறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழ் சைவப் பேரவை, முன்னாள் நீதிபதியும் பேரவைத் தலைவருமான வசந்தசேனன் தலைமையில் சட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சட்ட நிபுணர் குழு
இவற்றுடன் தொடர்புடைய ஆலய நிர்வாகங்கள் மற்றும் சட்டத்தரணிகளின் தொடர்பிலுள்ளவர்கள் மேலதிக தகவல்களை பெற்றுதருமாறு வேண்டுகின்றோம்.
அதே நேரம் தன்னார்வலர்களாக மேற்படி சட்ட நிபுணர் குழுவில் இணைய விரும்பும் முன்னாள் நீதிபதிகள், சட்டத்தரணிகளை வரவேற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
