வெடுக்குநாறி மலையில் உடைக்கப்பட்ட சிவலிங்கம்!தமிழ் இளைஞர்கள் மூன்று பேர் கைது(Photos)
வெடுக்குநாறி மலையில் தொல்லியல் சின்னங்களை சேதப்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று தமிழ் இளைஞர்கள் வவுனியா நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் கைது
வெட்டுக்குநாறி மலையில் உடைத்தெறியப்பட்ட சிவலிங்கம் நாளையதினம் (02.03.2023) மீள வைக்கப்படவுள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த அந்தப்பகுதி இளைஞர்கள் மூன்று பேர் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக நெடுக்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்தவாரம் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சூழலில் இருந்த அனைத்து சிலைகளும் உடைத்தெறியப்பட்ட நிலையில் அதற்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டங்களை மேற்கொண்டிருந்ததுடன் அரசியல் தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளையதினம் (02)சிவலிங்கம் வைக்கும் ஏற்பாடுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் பங்கேற்புடன் இடம்பெறவுள்ளது.
நாளை நிகழ்வுக்கான ஏற்பாடுகள்
அதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி ஊடகவியலாளரும் அமைச்சரின் ஆதரவாளருமான கலைச்செல்வன் மேற்கொண்டிருந்ததோடு அவருக்கு ஊடாக ஆலய வேலைகளுக்கு என இந்த நிகழ்வு ஏற்பாடுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவாவானந்தவிடமிருந்து ரூபா ஐந்து இலட்சம் ஒதுக்கப்பட்டு நாளை நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இவ்வாறு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடைக்கப்பட்ட ஆலய சிலைகளை மீண்டும் அதே இடத்தில் மீள அமைக்க நடவடிக்கை
எடுக்குமாறு ஜனாதிபதி பணித்திருப்பதாகவும் அதற்கு ஏற்ப நிகழ்வுகள் நடைபெற
உள்ளதாக அறிந்தே தமது குடும்ப உறுப்பினர்கள் ஆலய சூழலில் வேலைக்கு
சென்றதாகவும் ஆனால் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களம் அவர்களை கைது செய்துள்ளதாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.

தித்திப்பான சர்க்கரைப் பொங்கல் ரெசிபி- சர்க்கரை நோயாளருக்கு பாதிப்பு இல்லாமல் செய்வது எப்படி? Manithan
